பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா மேற்கொண்ட இணையத் தாக்குதல் பற்றிய அறிக்கை
2023-05-04 14:46:26

சீனத் தேசிய கணினி வைரஸ் அவசர பதில் மையமும், ச்சீஹு 360 தொழில் நுட்ப நிறுவனமும் மே 4ஆம் நாள் ஆய்வுக் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் இணையத்தின் மூலம் பிற நாடுகளைத் தாக்குவது தொடர்பான தகவல்கள் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகளவில் இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இது முன்மொழிவுகளை வழங்கும்.

அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனத்துடன் தொடர்புடைய இணையத் தாக்குதல் அமைப்பு ஒன்றை, ச்சீஹு 360 தொழில் நுட்ப நிறுவனம் 2020ஆம் ஆண்டு கண்டறிந்தது. பல்வேறு நாடுகளின் தகவல் உள்கட்டமைப்பு, விண்வெளி வசதிகள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள், பெரிய இணைய நிறுவனங்கள், அரசு வாரியங்கள் முதலியவை, இவ்வமைப்பின் தாக்குதல் இலக்குகளாகும்.

மேலும், அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் உலகளாவிய இணையத் தாக்குதல் நடத்தி வருவதாக, சீனத் தேசிய கணினி வைரஸ் அவசர பதில் மையமும், ச்சீஹு 360 தொழில் நுட்ப நிறுவனமும் நிறுவிய கூட்டு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளின் இணையத்தை அமெரிக்கா அவ்வப்போது கட்டுப்படுத்தி, முக்கிய தரவுகளை வேவு பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.