2023ஆம் ஆண்டின் மே தின விடுமுறையில் சுறுசுறுப்பாக இருந்த சுற்றுலா சந்தை
2023-05-04 10:30:09

2023ஆம் ஆண்டு மே தின விடுமுறையில் சீனாவின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா சந்தை நிலைமையை பற்றி பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் 3ஆம் நாள் அறிவித்தது. புள்ளிவிவரங்களின் படி,  சீனாவில் 27 கோடியே 40 இலட்சம் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த ஆண்டைின் இதே காலத்தை விட 70.83 விழுக்காடு அதிகம். உள் நாட்டு சுற்றுலா வருமானம் 14 ஆயிரத்து 805 கோடியே 60 இலட்சம் யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 128.9 விழுக்காடு அதிகம்.

இவ்விடுமுறையில் சீனாவில் நடைபெற்ற 47 ஆயிரத்து 500 பண்பாட்டு நடவடிக்கைகளில் சுமார் 16 கோடியே 60 இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.