க்ரெம்லின் மாளிகை மீது தாக்குதல் பற்றி உக்ரைன் மறுப்பு
2023-05-04 10:26:34

ரஷிய அரசுத் தலைவரின் இல்லமான க்ரெம்லின் மாளிகையின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் தொடுக்க உக்ரைன் மே 3ஆம் நாள் முயன்றது. ஆனால் அவ்விமானம் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்திப் பணியகம் அன்று வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.

அதே நாள் உக்ரைன் அரசுத் தலைவர் அலுவலகத்தின் ஆலோசகர் அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கையில், க்ரெம்லின் மாளிகையின் மீது உக்ரைன் தாக்குதல் தொடுக்கவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட தனது உரிமைப் பிரதேசத்திலுள்ள இராணுவ வசதிகள் மட்டுமே உக்ரைனின் தாக்குதல் இலக்காகும் என்றும் தெரிவித்தார்.