அமெரிக்கக் கூட்டாட்சி நிதி விகிதம் மீண்டும் அதிகரிப்பு
2023-05-04 09:55:23

நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் மே 3ஆம் நாள் முடிவடைந்தது. அந்நாட்டின் கூட்டாட்சி நிதி விகிதம் மேலும் 25 புள்ளி அதிகரிக்கப்பட்டு, அதாவது 5-5.25 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிப்பது இதுவே 10வது முறையாகும்.

இவ்வங்கி அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இவ்வாண்டின் முதல் காலாண்டில், அமெரிக்கப் பொருளாதாரம் மிதமான விரிவாக்கமடைந்து, வேலைவாய்ப்பில்லா விகிதம் குறைந்து, பண வீக்கம் உயர் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.