வட இந்தியாவில் மழை மற்றும் பனிப்பொழிவு
2023-05-04 18:07:22

இந்தியாவின் ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக, பருவம் தவறி, மழை பெய்ததுடன் பனிப்பொழிவும் ஏற்பட்டது. ஓரிரு வாரங்களுக்கு முன், 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வந்த நிலையில், கடந்த சில நாள்களில் 19 முதல் 25 டிகிரி செல்சியஸ் பதிவானது.

இந்நிலையில், வடமேற்குப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.