உள்நாட்டுக் கடன் மறுகட்டமைப்பு – இலங்கை ஆலோசனை
2023-05-04 18:06:40

இலங்கையின் உள்நாட்டுக் கடன் மறுகட்டமைப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் குணவர்தனே புதன்கிழமை தெரிவித்தார். உள்நாட்டுக் கடனை சிறந்த வழியில் மறுகட்டமைப்பது குறித்து பொருளியலாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் பல முறை விவாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக் கடன் மறுகட்டமைக்கப்பட்ட பிறகுதான், உள்நாட்டு கடன் மறுகட்டமைப்பு பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவிரவும், உள்நாட்டுக் கடன் மறுகட்டமைப்பின்போது, வங்கியில் கையிருப்பு வைத்துள்ளவர்கள், சமூகக் காப்புறுதித் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.