மே மாதத்துக்குள் கடன் மறுகட்டமைப்புத் தயார் – இலங்கை
2023-05-05 18:33:52

இலங்கையின் கடன் மறுக்கட்டமைப்பு வியூகம் இம்மாதத்துக்குள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலபாட்டியா வியாழக்கிழமை தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில், பொருளதாரம் நிலைத்தன்மை அடையும் அதேவேளையில், வரி குறைப்பு மற்றும் ஜிடிபி-க்கு எதிரான கடன் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரி வசூல் விரிவாக்கம் செய்யப்பட்டு, நாட்டின் வருவாய் இலக்கு நனவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிடிபி-க்கு எதிரான கடன் விகிதமானது தற்போது 128 விழுக்காடாக உள்ளது என்றும் அடுத்த சில ஆண்டுகளில் இது 95 விழுக்காடாகக் குறைக்கப்படும். அதேசமயம், அறைகூவல் மிகுந்த இலக்குளை எட்டுவதற்கு அரசு கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.