சீன-இந்திய நட்புறவு பற்றிய ச்சிங்காங்கின் கருத்து
2023-05-05 10:28:35

இந்திய மருத்துவர் துவாரகாநாத் கோட்னிஸின் குடும்பத்தினர், சீன மற்றும் இந்திய இளைஞர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான ச்சிங்காங் மே 4ஆம் நாள் இந்தியாவின் கோவாவில் சந்திப்பு நடத்தினார்.

ச்சிங்காங் கூறுகையில், மருத்துவர் துவாரகாநாத் கோட்னிஸ், சீன மக்களின் மாபெரும் நண்பராகவும், பாசிசவாத எதிர்ப்பு போரில் தலைச்சிறந்த வீரராகவும் திகழ்கிறார். அவரது எழுச்சியை வெளிக்கொணர்த்து, சீன-இந்திய அமைதி மற்றும் நட்புறவை உறுதியாகப் பேணிக்காத்து, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்றார்.

மேலும், உயிராற்றல் கொண்ட சீன-இந்திய இளைஞர்கள், இரு நாட்டு வளர்ச்சிக்கான முக்கிய இயக்காற்றலாக உள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான மானிட தொடர்புப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளுக்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.