இலங்கையில் விசாக் தினத்தில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
2023-05-05 18:33:16

இலங்கையில் புத்த மதத்தின் முக்கிய தினமான விசாக் தினத்தில் 988 கைதிகளுக்கு அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக சிறைத்துறை ஆணையர் சந்தனா எகனாயாகே தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 34இன்படி, அரசுத் தலைவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் உரிமை உள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இப்பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில், சுதந்திர தினம் மற்றும் முக்கியமான மத நிகழ்வுகளின்போது கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கொலை, போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் புரிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது இல்லை.