சின்காங்-லாவ்ரோவ் சந்திப்பு
2023-05-05 14:27:27

உள்ளூர் நேரப்படி மே 4ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் இந்தியாவின் கோவாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்தார்.

அடுத்த கட்டத்தில் இரு நாட்டு உயர்நிலை மற்றும் பல்வேறு நிலைப் பரிமாற்றத்தை செவ்வனே ஏற்பாடு செய்து, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மானிடப் பரிமாற்றத்தை ஆழமாக்கி, இரு தரப்புகளுக்கிடையிலான மக்கள் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

உக்ரைன் நெருக்கடி பற்றி, அமைதியான பேச்சுவார்த்தையை நடத்துவதைச் சீனா நிலைநிறுத்தி, அரசியல் வழியாக நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பயனுள்ள பங்கு ஆற்றும் என்று சின்காங் தெரிவித்தார். சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டை ரஷியா பாராட்டுவதாக லாவ்ரோவ் தெரிவித்தார்.