சீனப் பொருளாதார வளர்ச்சியின் உயிராற்றல்
2023-05-05 11:18:08

இவ்வாண்டு சீனாவின் மே தின விடுமுறை, பல அன்னிய செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, சீனாவில் 27 கோடியே 40 இலட்சம் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 70.83 விழுக்காடு அதிகம். உள் நாட்டுச் சுற்றுலா வருமானம் 14 ஆயிரத்து 805 கோடியே 60 இலட்சம் யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 128.9 விழுக்காடு அதிகம்.

சுற்றுலா சந்தையைத் தவிர்த்து, உணவகம் உள்ளிட்ட சேவைத் துறையும் இக்காலத்தில் மிக செழுமையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சீனா, எல்லை நுழைவு மற்றும் வெளியேற்ற கொள்கையைச் மாற்றியதன் காரணமாக, மே தின விடுமுறை காலத்தில் நிறைய சீனச் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டனர்.

அதோடு, சீன அரசு பல சலுகைக் கொள்கைகளை மேற்கொண்டது, மே தின விடுமுறை நுகர்வு பிரபலமாகியதற்கான முக்கியக் காரணமாகும்.

சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய சாரளங்களுள் ஒன்று விடுமுறை பொருளாதாரமாகும். சீன நுகர்வு சந்தையின் இயக்காற்றல் விரைவாக வெளியேறுவதை இவ்வாண்டு மே தின விடுமுறை காட்டியுள்ளது.

மேலும், சீனாவின் உள் நாட்டு நுகர்வு தேவை வலிமை மிக்கது என்பதால் அது உலகப் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.