சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2023-05-05 10:38:29

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் மே 4ஆம் நாள் கோவாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரைச் சந்தித்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, சின்காங் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் நவீனமயமாகுதலை நனவாக்கும் முக்கிய கட்டத்தில் இருக்கின்றன. இரு நாடுகள் தொலைநோக்கு பார்வையில் இரு தரப்புறவைக் கையாள வேண்டும். தத்தமது தேசத்தின் மறுமலர்ச்சிக்கும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்க வேண்டும். இந்தியத் தரப்புடன் இணைந்து கலந்தாய்வு மற்றும் பரிமாற்றத்தை மேற்கொண்டு, பல தரப்புவாத கட்டுக்கோப்பில் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி சீன-இந்திய உறவை சீரான மற்றும் நிலையான வளர்ச்சியுடன் கூடிய பாதைக்கு மீண்டும் கொண்டு வர சீனா விரும்புகிறது என்றார்.

தற்போது, சீன-இந்திய எல்லைப் பகுதியின் நிலைமை பொதுவாக நிலைத்தன்மையில் உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை இரு தரப்பும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். எல்லை நிலைமையை மேலும் தளர்த்து இப்பகுதியின் தொடரவல்ல அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் சின்காங் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவும் சீனாவும் பல துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சீன தரப்புடன் இணைந்து கலந்தாய்வு வழியாக எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையை பேணிகாக்க இந்தியா விரும்புவதாக ஜெயசங்கர் தெரிவித்தார்.

மேலும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து அவர்கள் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.