ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2023-05-05 17:29:46

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான ஜின் காங், மே 5ஆம் நாள் இந்தியாவின் கோவாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், தற்கால உலகம், பல்வகை நெருக்கடி மற்றும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களுக்கு முக்கிய ஆக்கமுள்ள சக்தியான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, “ஷாங்காய் எழுச்சி”யை வெளிக்கொணர்ந்து, மேலும் நெருங்கிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து விரிவாக்கி, தத்தம் நாட்டின் புத்துயிர் மற்றும் வளர்ச்சியைப் பெறும் பாதையில், கையோடு நடைபோட சீனா விரும்புகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.