உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அழுத்தம் அதிகரிப்பு
2023-05-06 19:12:18

ஏப்ரல் திங்களுக்கான உலகளாவிய உற்பத்தித் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுக் கூட்டமைப்பு மே 6ஆம் நாள் வெளியிட்டது. இக்குறியீடு தொடர்ந்து 2 மாதங்களாக குறைந்துள்ளது. மேலும், தொடர்ந்து 7 மாதங்களாக 50விழுக்காட்டுக்கு கீழ் உள்ள நிலைமையில் உள்ளது. தற்போது உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் சூழல் அதிகரித்து வரும் வேளையில், பொருளாதார மீட்சியைத் தூண்டும் சக்தி பலமற்றிருப்பதை இது காட்டுகின்றது.

 

தவிர, உலகின் பல்வேறு பிராந்தியங்களின் நிலைமைகளைக் காணும்போது, ஏப்ரலில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் உற்பத்தித் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடுகள் இரண்டும் 50 விழுக்காட்டுக்கு மேல் உள்ளன. மாறாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இக்குறியீடுகள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளன.