கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவு
2023-05-06 14:56:42

கோவிட்-19 பரவல் இனி சர்வதேச பொது சுகாதார அவசர நிலை அல்ல. 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் வழங்கப்பட்ட உச்ச நிலை எச்சரிக்கை நீக்கப்பட்டது என்று உலகச் சுகாதார அமைப்பு மே 5ஆம் நாள் அறிவித்தது.

இவ்வமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் கூறுகையில், தற்போது உலகளவில் கோவிட்-19 தொற்று நோய் பரவல் தாழ்ந்த நிலையில் உள்ளது. மக்களின் நோய் தடுப்பு ஆற்றல் உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் குறைந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பியுள்ளது.

உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில், உலகளவில் கோவிட்-19 தோற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 கோடியைத் தாண்டியுள்ளது.