சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவரின் சீனப் பயணம்
2023-05-06 15:28:58

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாச் 5ஆம் நாள் பெய்ஜிங் மாநகரை வந்தடைந்து சீனப் பயணத்தைத் தொடங்கினார். அதே நாளிரவு, தன்னார்வத் தொண்டர் பிரதிநிதிகள், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அதிகாரப்பூர்வத் திரைப்படத்தை இயற்றும் குழுவினர்கள் முதலியோர்களுடன் சேர்ந்து, 2022 பெய்ஜிங் எனும் சிறப்பு திரைப்படத்தை அவர் கண்டு ரசித்தார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பிறகு, மீண்டும் சீனாவுக்கு வந்த அவர் பெய்ஜிங், ச்சூஃபூ, ஹாங்சோ, ஷாங்காய் முதலிய இடங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்புக் கூட்டாளிகள், தொடர்புடைய துறையினர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களை அவர் சந்திக்க உள்ளார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அதிகாரப்பூர்வத்  திரைப்படமான பெய்ஜிங் 2022, மே திங்கள் 19ஆம் நாள் நாடளவில் திரையிடப்படும்.