பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய ஒளிபரப்பு நிறுவனமாகிய சீன ஊடகக் குழுமம்
2023-05-06 16:54:05

ஒலிம்பிக் ஒளிபரப்புச் சேவை நிறுவனமும் சீன ஊடகக் குழுமமும் 6ஆம் நாள் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டன. இதையடுத்து, சீன ஊடகக் குழுமம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய ஒளிபரப்பு நிறுவனமாக விளங்கியுள்ளது.

மேலும், ஒலிம்பிக் குறிக்கோளின் பரவலை ஊக்குவிக்க பணியாற்றும் வகையில், இரு தரப்புகளும் நீண்டகால ஒத்துழைப்பு அமைப்பு முறையை உருவாக்கும். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பக், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைசியோங் ஆகியோர் கையொப்பமிடும் விழாவில் பங்கேற்றனர்.