© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் பற்றி குறிப்பிடுகையில், பொய் செல்லினோம், ஏமாற்றினோம், திருடினோம் என்று அந்நாட்டின் அரசியல்வாதி ஒருவர் கூறினார். பரவலாகத் தெரிந்து கொள்ளப்பட்ட இக்கூற்றைத் தவிர, இணைய யுகத்தில், ஒட்டுக்கேட்டல், தாக்குதல் மற்றும் தூண்டுதலிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
பெருவாரியான உண்மைகளின் அடிப்படையில் சீனா வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், வெளிநாட்டு அரசுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் தகவல்களை அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் நீண்டகாலமாகத் திரட்டி, உலகின் பல்வேறு இடங்களிலும் தனது நலனுக்கு ஏற்ற பரிணாமம் மற்றும் வண்ணப் புரட்சியை இரகசியமாக தூண்டிவிட்டு, வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா உண்மையான இராணுவத் தாக்குதல் புரியும் வல்லரசாகும். அதன் வலிமை கருவியான மத்திய உளவு நிறுவனம், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு நிலையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
பனிப்போர் காலத்துக்குப் பிறகு, தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் விதம், இணையம் மீது அமெரிக்கா கவனம் செலுத்தத் தொடங்கியது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 1995ஆம் ஆண்டில் வெளியிட்ட உட்புற அறிக்கையில், இணையத்தைத் தாக்குதலுக்குப் பயன்படுத்த முடியும் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 21ஆம் நூற்றாண்டில் நுழைந்த பிறகு, அமெரிக்காவின் அடுத்தடுத்த அரசுகளின் முயற்சிகளுடன், தாக்குதல் தன்மையுடைய அதன் இணையவெளி உத்திநோக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடன், இணையத் தாக்குதல் ஆயுதங்களை அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் வியக்கத்தக்க அளவுக்கு உருவாக்கியுள்ளது.
உலகளவில் கிட்டத்தட்ட அனைத்து இணையங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் இராணுவ ஆயுதங்கள் எந்த நேரம் மற்றும் இடத்திலும் மற்ற நாடுகளின் இணையங்களைக் கட்டுப்படுத்தி, முக்கிய தரவுகளைத் திருட முடிகிறது என்று சீனா வெளியிட்ட இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா உள்பட பல நாடுகளும் அமெரிக்காவின் இணையத் தாக்குதலால் பாதிப்படைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.