சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2023-05-07 18:56:09

உள்ளூர் நேரப்படி மே 6ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர்களிடையே 5ஆவது முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். 

இப்பேச்சுவார்த்தையில், அண்டை நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, ஒன்றுடன் ஒன்று இணைப்பு, வர்த்தக முதலீடு உள்ளிட்ட கருப்பொருட்கள் குறித்து முத்தரப்பினரும் நேர்மையாகவும் ஆழந்த முறையிலும் கருத்துக்களைப் பரிமாறி, ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை என கட்டுகோப்புக்குள் பேச்சுவார்த்தை முறைமையை மீண்டும் தொடங்கி வைக்கவும், பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, வறுமை ஒழிப்பு, மானிடவியல் முதலிய துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முத்தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஒத்துழைப்பை முன்னேற்றி, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையை ஆப்கானுக்கு நீட்டிப்பதை ஆதரித்து, மூன்று நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரித்து, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று அவர்கள் தெரித்தனர்.