அமெரிக்காவின் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
2023-05-07 18:37:44

படம்:CFP

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். தவிரவும், 7 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவரது அடையாளம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.