சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
2023-05-07 18:38:32

சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, ஏப்ரல் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்புத் தொகை 320480கோடி அமெரிக்க டாலர் ஆகும். முந்தைய மாதத்தை விட இது 2090கோடி அமெரிக்க டாலர் அதிகமாகும். அதன் அதிகரிப்பு விகிதம் 0.66விழுக்காடாகும். சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 மாதங்களாக உயர்ந்து, நிதானமான நிலையில் உள்ளது.