சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது:சீனா
2023-05-08 17:20:04

நடைபெறவிருக்கும் சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு, இவ்வாண்டில் சீனாவின் முதலாவது முக்கிய தூதாண்மை நிகழ்ச்சியாகும். மேலும், சீனாவுக்கும் தொடர்புடைய மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 31ஆண்டுகளில், 6 நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டை நேரடியாக நடத்துவது இதுவே முதன்முறையாகும். இவ்வுச்சிமாநாடு, சீன-மத்திய ஆசிய நாடுகளின் உறவு வளர்ச்சி வரலாற்றில் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.