ஜப்பானிய தலைமையமைச்சரின் வருகைக்கு தென் கொரிய மக்கள் எதிர்ப்பு
2023-05-08 10:44:20

ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா 7ஆம் நாள் தென் கொரிய தலைநகர் சியோலைச் சென்றடைந்து, 2 நாட்கள் நீடிக்கும் அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று அவரும் தென் கொரிய அரசுத் தலைவர் யூன் சுக் இயோலும் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டுறவை மேம்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அதே நாள், தென்கொரியாவின் சில சமூகக் குழுக்கள், அந்நாட்டின் அரசு தலைவர் இல்லத்துக்கு முன்பாக ஆர்பாட்டம் நடத்தி, ஜப்பானின் வரலாற்று குற்றச் செயலுக்கு ஃபுமியோ கிஷிடா மன்னிப்பு கேட்டு கொள்ளவும், தென் கொரிய-அமெரிக்க-ஜப்பானிய ராணுவ கூட்டமைப்பை நிறுத்தவும் வேண்டும் என்றும் கோரியதோடு, தென் கொரிய அரசு ஜப்பானுடனான அவமானகரமான தூதாண்மையுறவை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தன.