அமெரிக்காவில் வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி
2023-05-08 18:42:45

மே 7ஆம் நாள் காலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் பிரவுன்ஸ்வில்லி நகரிலுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது எஸ்.யு.வி ரக வாகனம் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் காவல்துறை  தெரிவித்துள்ளது.

வானகம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையின்படி, அவர் வேண்டுமென்றே இந்த மோதல் விபத்தை ஏற்படுத்துவதற்கு சாத்தியம் உள்ளது என்று காவல்துறை கருதுகிறது.

இந்த விபத்தற்கு முன்பு, 6ஆம் நாள், டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்  9 பேர் பலியானர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், நவ-நாஸி குழுவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டதாக  அமெரிக்க செய்தி ஊடகம் 7ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது.