சீன வெளியுறவு அமைச்சர்-அமெரிக்க தூதர் சந்திப்பு
2023-05-08 17:32:32

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸை பெய்ஜிங்கில் 8ஆம் நாள் சந்தித்துரையாடினார். அப்போது சின்காங் கூறுகையில், சீன அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான நலன்களைச் சீர்குலைப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். குறிப்பாக தைவான் பிரச்சினையைச் சரியாக கையாள வேண்டும். “தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்திக்கு ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன் பெறும் அடிப்படையில், இரு தரப்புமிடையே உள்ள பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று சின்காங் தெரிவித்தார்.