அரபு நாடுகள் லீக்கின் உறுப்பு நாட்டுத் தகுநிலையை மீட்டெடுத்த சிரியா
2023-05-08 10:45:25

அரபு நாடுகள் லீக்கின் உறுப்பு நாட்டுத் தகுநிலையை சிரியா மீண்டும் பெறுவதற்கான வரைவுத் தீர்மானம், மே 7ஆம் நாள் அரபு நாடுகள் லீக்கின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக நடப்பு தலைவரான எகிப்தின் வெளியுறவு அமைச்சர் ஷோகரி இக்கூட்டத்தில் பேசுகையில், சிரியாவுடன் தூதாண்மை உறவை மீட்டெடுப்பது பற்றி, பல்வேறு உறுப்பு நாடுகள் சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்கும். சிரியா பிரச்சினையைத் தீர்ப்பது, நீண்டகால கடமை என்றாலும், அரபு நாடுகளின் பொது நலன்களுடன் தொடர்புடையது என்று தெரிவித்தார்.

அரபு நாடுகள் லீக்கின் பொதுச் செயலாளர் அகமத் அப்துல் கேட் கூறுகையில், சிரியாவின் உறுப்பு நாட்டுத் தகுநிலை மீட்டெடுப்பு பற்றி பல நாடுகளுக்கு மனநிறைவின்மை ஏற்படக் கூடும். ஆனால், அரபு நாடுகளின் சுதந்திர முடிவு இதுவாகும் என்று கூறினார்.

மே 19ஆம் நாள் சௌதி அரேபியத் தலைநகரில் நடைபெறவுள்ள அரபு நாடுகள் லீக்கின் மாநாட்டில், சிரியா அரசுத் தலைவர் பங்கெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.