முத்தரப்பு ஒத்துழைப்பு மூலம் பிராந்தியத்தின் செழுமையை ஊக்குவிக்க சீனா விருப்பம்
2023-05-09 18:36:36

சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர்களிடையே சமீபத்தில் நடைபெற்ற 5ஆவது முத்தரப்புப் பேச்சுவார்த்தையில்  அண்டை நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஒன்றுடன் ஒன்று இணைப்பு, வர்த்தக முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டு ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளன.

சீன வெளியுறவு அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 9ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை பற்றி கூறுகையில்

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு  இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதுவே முதல்முறையாகும். முத்தரப்பு ஒத்துழைப்பு அமைப்பு மீண்டும்  தொடங்குவதை இது குறிக்கிறது என்று தெரிவித்தார்.

சீனா – ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே முத்தரப்பு ஒத்துழைப்பு வழிமுறையில், தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பிராந்தியத்தின் நிலைப்புதன்மை மற்றும் செழுமையை ஊக்குவிக்கவும் வேண்டும் என்று சீனா விரும்புவதாக வாங் வென்பின் தெரிவித்தார்.