உக்ரைனுக்கு 120 கோடி டாலர் ஆயுத உதவி:அமெரிக்கா
2023-05-09 10:27:55

அமெரிக்கா, உக்ரைனுக்குத் தொடர்ந்து 120 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுத உதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இந்த உதவித் தொகை, ட்ரோன், ராக்கெட், தரையிலிருந்து வானுக்குப் பாயும் ஏவுகணை ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்க ஃபாக்ஸ் நியூஸ் சேனல் மே 8ஆம் நாள் தெரிவித்தது.

இப்புதிய உதவி திட்டம் செயலாக்கப்பட்டால், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை உக்ரைனுக்கான அமெரிக்காவின் மொத்த உதவித்தொகை, 3700 கோடி டாலரை எட்டும். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொது மக்கள் கருத்துக் கணிப்பின் தரவுகள் படி, உக்ரைனுக்கான ஆயுத உதவிக்கு அமெரிக்கர்களின் ஆதரவு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.