சீன வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியில் 5.8% அதிகரிப்பு
2023-05-09 14:16:39

சீனாவில் இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி தொகை 133.2 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.8 விழுக்காடு அதிகரித்தது. இதில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை, கடந்த ஆண்டைக் காட்டிலும் முறையே 10.6 மற்றும் 0.02 விழுக்காடு அதிகம் என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 9ஆம் நாள் தெரிவித்தது.

இக்காலத்தில், மத்திய ஆசிய நாடுகள் உட்பட, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுடனான் ஏற்றுமதி இறக்குமதி தொகை, 46.1 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 16 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.