அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய மத்திய கிழக்குப் பிரதேசம்
2023-05-09 11:34:29

சிரிய அரசு பிரதிநிதிக் குழு அரபு லீக் செயற்குழு மற்றும் அதன் அனைத்து அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் தகுநிலை மீட்கப்பட்டுள்ளதாக 7ஆம் நாள், அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது, சௌதி அரேபியா மற்றும் ஈரான் பெய்ஜிங்கில் ஒத்த கருத்தை எட்டிய பின், மத்தியக் கிழக்கு முன்னேற்றப் போக்கின் மற்றொரு மைல் கல் என்று கருதப்படுகிறது.

1945ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரபு லீக்கில் இடம்பெற்றிருந்த 22 உறுப்பு நாடுகளில் சிரியா, ஒன்றாகும். 2011ஆம் ஆண்டு சிரியா நெருக்கடி மூண்ட பின், அரபு லீக் சிரியாவின் உறுப்பு நாட்டுத் தகுநிலையை நிறுத்தியது. அதே வேளை, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், சிரியா மீது தடை நடவடிக்கைகள் மேற்கொண்டன.

2018ஆம் ஆண்டு, சிரிய அரசு படை 70 விழுக்காட்டு இறையாண்மை உரிமைப் பிரதேசத்தை மீணடும் கைப்பற்றிய பின், அரபு நாடுகள் சிரிய அரசுடனான தொடர்பை மீட்டன. சீன இணக்கத்தின் கீழ், சௌதி அரேபியா மற்றும் ஈரான் தூதரக உறவைத் துவங்கியது, சிரியா அரபு லீக்குத் திரும்பியதை நேரடியாக முன்னேற்றியது. அதோடு, நீண்டகாலமாக அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் மத்தியக் கிழக்கு விவகாரங்களில் தலையிட்டு, முரண்பாடுகளைத் தீவிரமாக்கி, மோதலை ஏற்படுத்தி வருகிறது என்பதை மத்திய கிழக்கு மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். சொந்த தலைவிதி, சொந்த கையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதே வேளை, அமெரிக்காவின் கருத்தின்படி செயல்பட விரும்பாத மத்திய கிழக்கை எதிர்நோக்கிய, அமெரிக்க அரசு ஒரு காலக் கட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், மத்தியக் கிழக்கு நல்லிணக்க முன்னேற்றப் போக்கை தடுக்க முடியவில்லை. அமெரிக்க செய்தியாளர் Fareed Zakaria தனது கட்டுரையில் கூறுகையில், தற்போது மத்தியக் கிழக்கில் தோன்றிய நல்லிணக்கப் போக்கு, சகாப்தம் மாறியுள்ளது என்பதை அமெரிக்காவுக்கு நினைவூட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.