சூடான் மோதலில் 7 இலட்சம் மக்கள் வீடுவாசலின்றி அல்லல்படுவர்
2023-05-10 11:24:36

சூடானில் நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் சுமார் 7 இலட்சம் பேர் வீடுவாசலின்றி தவித்து வருவதாக ஐ.நாவின் சர்வதேசக் குடியேறுவோர் அமைப்பு 9ஆம் நாள் தெரிவித்தது.

உலகச் சுகாதார அமைப்பு அதே நாளில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தகவலின்படி, இச்சண்டையில் 604 பேர் உயிரிழந்தனர். 5000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இச்சண்டை தொடர்ந்தால், சூடானில் 20 இலட்சம் முதல் 25 இலட்சம் வரை மக்கள், தானிய நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடும்.