2விழுக்காடு பணவீக்கத்துக்குத் திரும்ப காலம் தேவை:அமெரிக்கா
2023-05-10 16:19:59

அமெரிக்காவின் பணவீக்கம் ஏற்கக் கூடிய நிலைமைக்குத் திரும்பும் முன்பே, பொருளாதாரத்தில் வட்டி விகித உயர்வுக் கொள்கையின் பங்களிப்பைக் காண இன்னும் சில காலத்துக்குக் காத்திருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜான் வில்லியம்ஸ் 9ஆம் நாள் தெரிவித்தார். பொருளாதார சமநிலையை மீட்டெடுக்கவும், 2விழுக்காடு என்ற பணவீக்க விகிதத்துக்குத் திரும்பவும், சில காலம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.