அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் கூற்று அபத்தமானது
2023-05-10 17:19:08

சின்ஜியாங் மற்றும் திபெத் உள்ளிட்ட பிரதேசங்களில் சிறுப்பான்மை இனத்தவர்களின் டி.என்.ஏ போன்ற தரவுகளை சீனா சேகரித்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த கூற்று மிகவும் அபத்தமானது. அதிர்ச்சியூட்டும் போலி செய்தியை உருவாக்கி பரப்புவதை தவிரவும், வேறு எதுவும் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 10ஆம் நாள் தெரிவித்தார். எந்த தேசிய இனத்தையும் சேர்ந்த சீன குடிமக்களின் தனியுரிமைத் தகவல்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரபணுக்கள் பற்றிய தகவல்களை அதிக அளவில் சேகரித்து அதைப் பயன்படுத்திய நாடு, அமெரிக்கா தான். வால்ஸ்ட்ரீட் நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, மரபணு ஆயுதம் என்ற ஆராய்ச்சி திட்டத்தை அமெரிக்க ராணுவ தலையையகமான பென்டகன் வகுத்துள்ளது. ஆசியாவிலுள்ள சீனர், ஐரோப்பாவிலுள்ள ஆரியர் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள அரபு மக்களின் மரபணுக்கள் பற்றிய தகவல்கள், அமெரிக்க ராணுவம் சேகரிக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.