சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வலுவான இயக்கு ஆற்றல்
2023-05-10 10:59:31

சீனாவில் இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி தொகை 133.2 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.8 விழுக்காடு அதிகரித்தது.

மேலும், ஆசியான் நாடுகள் மற்றும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுடனான் ஏற்றுமதி இறக்குமதி தொகை, கடந்த ஆண்டை விட முறையே 13.9 மற்றும் 16 விழுக்காடு அதிகரித்தது.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் சாதனைகள் பெறுவது எளிதல்ல. உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பையும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளை நிதானப்படுத்துவதையும் சீன அரசு தொடர்ந்து முன்னேற்றுவதுடன் இச்சாதனைகள் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஜூன் 2ஆம் நாள் பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு பற்றிய உடன்படிக்கை, 15 உறுப்பு நாடுகளில் பன்முகங்களிலும் அமலுக்கு வரவுள்ளது. இது சீனாவின் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு அதிக நன்மைகளைத் தரும்.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் மேலும் உயரும். இத்தகைய பின்னணியில், சீன வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி இன்னும் அதிக புற அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. ஆனால், சீன வெளிநாட்டு வர்த்தகம் அதிக உந்து ஆற்றலுடன் பொருளாதாரத்தின் மீட்சியின் வலுவான சமிக்ஞையை உலகத்துக்கு வெளிக்காட்டும் என்று நம்பப்படுகிறது.