சீனச் சேவை வர்த்தகத்தின் வளர்ச்சி தொடரும்
2023-05-10 10:00:23

சீன வணிக அமைச்சகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனச் சேவை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. சேவைத் துறையின் ஏற்றுமதி இறக்குமதி தொகை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 401 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 8.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அறிவு சார் சேவை வர்த்தகத்தின் வளர்ச்சி தொடர்ந்து வருகிறது. முதலாவது காலாண்டில், இச்சேவை வர்த்தகத்தின் ஏற்றுமதி இறக்குமதி தொகை 69 ஆயிரத்து 470 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 12.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுற்றுலா சேவை துறையும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. முதலாவாது காலாண்டில், இச்சேவையின் ஏற்றுமதி இறக்குமதி தொகை 33 ஆயிரத்து 763 கோடி யுவானை எட்டி, 56.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.