பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் கைது
2023-05-10 10:37:41

பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சரும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மே 9ஆம் நாள் அந்நாட்டின் ஊழல் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இஸ்லாமாபாத் உயர் நிலை நீதி மன்றத்தில் தனக்கு எதிரான பல வழக்குகள் பற்றி  9ஆம் நாள் நடத்தப்பட்ட விசாரணையில் இம்ரான் கான் பங்கெடுத்த பிறகு வெளியேறிய போது கைது செய்யப்பட்டார்.