காசாப் பிரதேசத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல்
2023-05-10 11:23:51

பாலஸ்தீன காசாப் பிரதேசத்தின் சுகாதாரத் துறை 9ஆம் நாள் கூறுகையில், காசாப் பிரதேசத்தின் மீது இஸ்ரேல் நடத்திய பல வான் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமுற்றனர்.

இஸ்ரேல் தரப்பில் கூறுகையில்,  டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டைக் கொண்ட ஜிஹாத் அமைப்பினர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.

காசாப் பிரதேசத்தின் மீது இஸ்ரேலின் “வன்முறையான ஆக்கிரமிப்பு” காரணமாக, பாலஸ்தீன தலைமையமைச்சர் திட்டமிட்டப்படி 9ஆம் நாள் சௌதி அரேபியா பயணம் நீக்கப்பட்டது என்று பாலஸ்தீன தலைமையமைச்சர் அலுவலகம் 9ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.