அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பு பற்றி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடையவில்ல
2023-05-10 16:53:23

கடன் உச்ச வரம்பு குறித்து அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுத் கட்சித் தலைவர்கள் ஆகியோரிடையேயான பேச்சுவார்த்தை 9ஆம் நாள் நடைபெற்றது. இந்த பிரச்சினையில் இரு கட்சிகளுக்கிடையே பெரிய வேறுபாடு நிலவியதால்,  பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

உடன்பாட்டுக்கு வராத போதிலும், 12ஆம் நாள் அவர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர். வரும் சில வாரங்களில் அரசாங்கம் ஒப்பந்தத்தை மீறக் கூடிய  இடர்பாட்டை தவிர்க்க அவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.