சௌதி அரேபியாவுக்கான தூதர் விரைவில் நியமிக்கப்படுவார் - ஈரான் வெளியுறவு அமைச்சர்
2023-05-11 10:44:49

சௌதி அரேபியாவுக்கான தூதர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று ஈரானின் இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் 10ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, ஈரானில் உள்ள சௌதி அரேபியத் தூதரகம் விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஹியான் 8ஆம் நாள் கூறினார்.

ஈரானும் சௌதி அரேபியாவும் 2016ஆம் ஆண்டில் தூதான்மை உறவுகளை முறித்துக் கொண்டன. இவ்வாண்டின் ஏப்ரல் 6ஆம் நாள் கூட்டு அறிக்கை ஒன்றில் இரு நாடுகளும் கையொப்பமிட்டு, தூதாண்மை உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தன.