ஷென்சோ-15 விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள்
2023-05-11 10:00:32

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயண அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, தியான்சோ-6 சரக்கு விண்கலம் மே 11ஆம் நாள் அதிகாலை 5:16 மணி அளவில் விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. 

தியான்சோ-6 சரக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆடைகள், உணவுகள், குடிநீர், உந்துவிசை முதலிய பொருட்களும் இவற்றோடு 70 கிலோகிராம் எடையுடைய புத்தம் புதிய பழங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

திட்டத்தின்படி, ஷென்சோ-15 விண்வெளி வீரர்கள் 12ஆம் நாள் முற்பகல் 8 மணி அளவில் இப்பொருட்களைப் பெறுவர்கள்.

மேலும், ஷென்சோ-16 என்னும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் மே திங்களுக்குள் ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.