சீன-பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் கலந்தாய்வு
2023-05-11 10:41:26

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங், மே 10ஆம் நாள் பாரிஸில், பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் கோலொன்னாவுடன் சீன-பிரஞ்சு உயர் நிலை மனிதப் பண்பாட்டு பரிமாற்ற அமைப்புமுறை தலைவர்களின் கலந்தாய்வில் பங்கெடுத்தார்.

இக்கலந்தாய்வில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பண்பாடு, கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இரு தரப்புறவு வளர்ச்சிக்கான புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க வேண்டும் என்றும், பிரஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுத் தலைவர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சின்காங் தெரிவித்தார்.

சீனாவின் ஆலோசனைகளை கோலொன்னா பாராட்டினார். இரு தரப்புகளுக்கிடையில் மனிதப் பண்பாட்டு பரிமாற்றத்துக்கு பிரான்ஸ் முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவு தொடர்பான கொண்டாட்ட நடவடிக்கைகளைச் சீனாவுடன் சேர்ந்து கூட்டாக வடிவமைக்க வேண்டும். சுற்றுலா, விளையாட்டு, பண்பாட்டுப் பரிமாற்றம் முதலிய துறைகளின் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.