அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் உச்ச நிலை
2023-05-11 17:06:12

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கியதால், அமெரிக்க பாதுகாப்பு துறைத் தொழில்நிறுவனங்களின் உற்பத்தி கடந்த சில தசாப்தங்களில் காணாத உச்ச நிலையை எட்டியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பிரதிநிதி ஜெஃப் ஜூர்கன்சன் கூறியதாகப் பிரிட்டன் ஃபைனான்சியல் டைம்ஸ் நாளேடு 10ஆம் நாள் அறிவித்தது.

உக்ரைன் நெருக்கடி துவங்குவதற்கு முன்பே, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டு பாதுகாப்புத் துறை உற்பத்தியை பல்வகைப்படுத்த முயற்சி மேற்கொண்டது. சிறிய ரக தொழில்நிறுவனங்களை பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ஈடுபடச் செய்ய, அமெரிக்கா ஜனவரியில் ஒரு புதிய நெடுநோக்கைத் துவக்கியுள்ளது என்று ஜூர்கன்சன் கூறினார்.

உக்ரைனில் ஆயுதங்களின் பெரிய தேவையால், மேலை நாடுகளின் பல சிறிய ரக பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் வேகமாக வளர்ந்துள்ளதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.