சீனாவில் முதியோர் மருத்துவ கண்காணிப்புச் சேவை
2023-05-12 10:44:30

மே 12ஆம் நாள் சர்வதேச செவிலியர் தினமாகும். செவிலியர் அணியை வளர்த்து, மருத்துவ கண்காணிப்புச் சேவையை மேம்படுத்துவது குறித்து, சீனத் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் கூட்டம் நடத்தியது.

“இணைய+மருத்துவ கண்காணிப்புச் சேவை”என்ற சோதனை கொள்கை 2019ஆம் ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்டது. வயது முதிர்ந்தவர்கள், வயதான மாற்றுத்திறனாளிகளுக்கு இக்கொள்கை பெரிதும் உதவிகரமாக அமைந்துள்ளது. இக்கொள்கையின் அளவு மேலும் விரிவுபடுத்தப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 2000க்கும் மேலான மருத்துவ வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் இக்கொள்கையைச் செயல்படுத்தின. இதன் மூலம், முதியோர் உள்ளிட்ட மக்களுக்கு வீட்டிலே 60க்கும் மேலான மருத்துவச் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.