அமெரிக்கா கடன் உச்சவரம்பை அதிகரிக்க தவறினால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்
2023-05-12 16:40:04

அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை அதிகரிக்க தவறினால், கடும் பின்விளைவு ஏற்படும். அது, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல்லன் எச்சரித்தார்.

ஜி-7 குழு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்களிடையேயான மாநாடு 11ஆம் நாள் ஜப்பானில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்பு ஜேனட் எல்லன் மீண்டும் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உடன் உச்ச வரம்பு உரிய காலத்துக்குள் உயர்த்தப்படாமல் இருந்தால், கூடிய விரைவில் ஜுன் 1ஆம் நாள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என்றும் எல்லன் எச்சரித்தார். ஆனால், உடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இடையே பெரிய வேறுப்பாடு காணப்பட்டுள்ளது.