பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் கைது சட்டவிரோதமாக உள்ளது: அந்நாட்டு உச்ச நீதி மன்றம்
2023-05-12 14:08:36

அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் 11ஆம் நாள் தீர்ப்பு அளித்தது. இம்ரான் கானின் அடிப்படை உரிமையை இது ஊறுபடுத்தியது என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்தது. அவர் 12ஆம் நாள் காலை இஸ்லாமாபாத் உயர்நிலை நீதி மன்றத்துக்கு எழுத்து மூல விண்ணப்பம் சமர்ப்பித்து, இக்கைது குறித்து சந்தேகம் தெரிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.