ரஷியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு பலமடங்கு அதிகரிப்பு
2023-05-12 11:31:09

இந்தியாவின் பரோடா வங்கி வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்தியா, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவு, முன்பை விட பல மடங்கு அதிகரித்தது.

2021ம் ஆண்டில் இந்தியாவின் முழு ஆண்டு கச்சா எண்ணெய் இறக்குமதியில், ரஷிய கச்சா எண்ணெய் 2 விழுக்காடு வகிக்கிறது. தற்போது இப்பங்கு 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ரஷியா, சலுகை விலையில் இந்தியாவுக்கு எரியாற்றல் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது உலகளவில் 3வது பெரிய கச்சா எண்ணெய் இறுக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரிட்டனின் பிபிசி நிறுவனம் தெரிவித்தது.