வாங் யீ மற்றும் சல்லிவன் சந்திப்பு
2023-05-12 09:54:25

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங் யீ, அமெரிக்கத் தேசிய பாதுகாப்புக்கான அரசு தலைவரின் ஆலோசகர் ஜாக் சல்லிவன் ஆகியோர் மே 10 மற்றும் 11ஆம் நாட்களில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீன-அமெரிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இருதரப்பினரும் வெளிப்படையாகவும் ஆழமாகவும் விவாதித்தனர். தைவான் பிரச்சினை குறித்து சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை வாங் யீ பன்முகங்களிலும் விளக்கிக்கூறினார். ஆசிய-பசிபிக் நிலைமை, உக்ரைன் பிரச்சினை முதலிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்  கொண்டனர்.