அமெரிக்காவில் குழந்தை தொழிலாளர் பிரச்சினை தீவிரம்
2023-05-12 10:25:06

நியூயார்க் டைம்ஸ் செய்திநாளேடு அண்மையில், அமெரிக்காவின் குழந்தை தொழிலாளர் பிரச்சினை குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில் ஒரு படம் இருக்கிறது. இப்படத்தில், 15 வயது இளைஞர், உற்பத்தி தொழில் நிறுவனம் ஒன்றில் இரவு வேலை செய்கின்றார். உலகளவில் குழந்தை தொழிலாளர் பிரச்சினைக்கு எதிரான குரல் ஒலிக்கும் நிலையில், அமெரிக்காவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்க தொழிலாளர் துறையின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில், லட்சக்கணக்கான இளம் வயதினர்கள், வேளாண் துறை, உணவுச் சேவை, சில்லறை விற்பனை, பொழுது போக்கு போன்ற துறைகளில் வேலை செய்தனர். இதில் பெரும்பாலோனோர் குடியேறிய சிறுவர், சிறுமிகளாக உள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, 2018ஆம் ஆண்டு முதல் இது வரை, அமெரிக்காவில் சட்டவிரோதமான குழந்தை தொழிலாளரகளின் எண்ணிக்கை 70 விழுக்காடு அதிகரித்துள்ளது.