உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தாது: குரங்கு அம்மை
2023-05-12 15:54:46

குரங்கு அம்மை நோய், சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை இனி ஏற்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் 11ஆம் நாள் அறிவித்தார்.

அன்று நடைபெற்ற வெளியீட்டுக் கூட்டத்தில் டெட்ரோஸ் கூறுகையில்

கடந்த 3 மாதங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை, அதற்கு முந்தைய 3 மாதங்களில் இருந்த நிலையை விட சுமார் 90 விழுக்காடு குறைந்துள்ளது. அவ்வமைப்பின் அவசரக் குழு 10ஆம் நாள் நடத்திய விவாதத்தில், குரங்கம்மை நோய் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, குரங்கு அம்மை பரவிய பிறகு, மொத்தம் 111 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 140 பேர் உயிரிழந்தனர்.