உலக முன்னணியில் சீனாவின் நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில் நுட்பம்
2023-05-13 16:28:52

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரில் கேர்-லைஃப் என்னும் நிலநடுக்கத் தடுப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிறுவனத்தில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில் நுட்பத்தின் முன்னெச்சரிக்கை வெளியிடும் நேரம், நம்பகத் தன்மை உள்ளிட்ட முக்கிய குறியீடுகளும், பன்பாடு மற்றும் சேவை அளவும் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. நேபாளம், இந்தோனேசியா, துருக்கி முதலிய நாடுகளுக்கு இத்தொழில் நுட்பம் சேவையளித்துள்ளது.

2008ஆம் ஆண்டு வென்ச்சுவானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, நிலநடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் அளவு அறிவிப்பு பற்றிய தொழில் நுட்பத் திட்டப்பணிகளை சீன அரசு தீவிரப்படுத்தியது. மெக்சிகோ மற்றும் ஜப்பானை அடுத்து, பொது மக்களுக்கு நிலநடுக்க முன்னெச்சரிக்கையை வெளியிடும் திறமை கொண்ட 3வது நாடாக சீனா விளங்கியுள்ளது.